பதறவைத்த பல்லடம் கொலை வழக்கு - குற்றவாளிகள் மீது குண்டாஸ்.! - Seithipunal
Seithipunal


பதறவைத்த பல்லடம் கொலை வழக்கு - குற்றவாளிகள் மீது குண்டாஸ்.!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியில் கடந்த 3-ம் தேதி மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, சின்னம்மா ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் உள்ளிட்டோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளான செல்லமுத்து, ஐயப்பன், வெங்கடேஷ் (எ) ராஜ்குமார், சோனை முத்தையா உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.

இவர்களில், முக்கிய குற்றவாளியான் வெங்கடேஷ் என்ற ராஜ்குமார் விசாரணையின் போது தப்பிச் செல்ல முயன்றதாக காவல் துறையால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உதவியதாக செல்வம் (எ) வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்தக் கொலை சம்பவத்தில் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில், வெங்கடேஷ் (எ) ராஜ்குமார், ஐயப்பன், செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guntas on palladam murder case accuest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->