வசமாக சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்? சிபிஐ நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா உள்ளிட்டார் மீதான குற்ற வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம், சிபிஐ முதன்மை நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதாக, சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த வழக்கில் அப்போது அமைச்சர்களாக இருந்த சி விஜயபாஸ்கர், பி.வி ரமணா, காவல் துறையை சேர்ந்த சில உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் பலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இது அனைத்தும் அம்பலமானது.

மேலும் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து தமிழக ஆளுநரும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் 16 வது நபராக குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து பிறப்பிக்கப்பட்ட ஆளுநரின் உத்தரவில் 17வது நபராக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து விளக்கம் அளிக்க கோரி சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின் படி அளிக்கப்பட்ட விளக்கத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 16-வது நபராகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றும், கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் எந்த தவறும், குறைபாடும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சிபிஐ முதன்மை நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்வதாகவும், இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 19ஆம் தேதி தள்ளி வைப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gutka case ADMK Ex Minister case CBI Court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->