கல்வி கட்டண பாக்கி செலுத்தாத மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் தர மறுக்க கூடாது! பள்ளிக்கல்வித்துறை.!
Hall tickets should not be denied to students who do not pay fees
கல்வி கட்டணம் பாக்கி செலுத்தாத மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தர மறுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் சில தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண பாக்கி செலுத்தாதது மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தர மறுத்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, அரசு தேர்வுத் துறையால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் பொது தேர்வு எழுதும் வகையில் அவர்களுக்கு ஆல் டிக்கெட் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் கல்வி கட்டண நிலுவைத் தொகை செலுத்தவில்லை என்பதற்காக ஹால் டிக்கெட் வழங்குவதில் ஏதேனும் புகார் எழுந்தால் அந்த பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Hall tickets should not be denied to students who do not pay fees