காவேரியில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை!
HC Madurai Order for Karur carvery issue sand mafia
காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த நாகராஜன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவரின் அந்த மனுவில், அரவக்குறிச்சி பகவதி அம்மன் கோவில் மார்கழி திருவிழாவின் போது, காவேரி ஆற்றில் புனித நீர் எடுத்துட்டு வர சென்ற எனது மகன் பிரபாகரன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த மூவரின் உயிரிழப்பிற்கு மணல் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்புகள் தான். இதே போல் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுசம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதுவரை அந்த இழப்பீடு தொகை வழங்கவில்லை. எனவே இந்த இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் நாகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "காவிரி ஆறு தற்போது மோசமான நிலையில் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் காவிரி ஆறு இப்போது இல்லை.
காவேரி ஆற்றல் தண்ணீரும் இல்லை. மணலும் இல்லை. கடந்த ஆண்டு மட்டுமே நம் காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடியது.
இந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை அடுத்து வரக்கூடிய நான்கு வாரங்களில் வழங்க வேண்டும்" என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
English Summary
HC Madurai Order for Karur carvery issue sand mafia