தூத்துகுடி || ஆபாச படம் காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமையாசிரியர் போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த தலைமை ஆசிரியராக தாமஸ் சாமுவேல்  என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படங்ளை காட்டி பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படுகிறது.  இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியைடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமையாசிரியர் தாமஸ் சாமுவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Headmaster Arrested In POCSO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->