இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. பரிதாபமாக பலியான தலைமையாசிரியர்...!
headmaster death in accident
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி தலைமையாசிரியர் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு லதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சிவகங்கை நகராட்சியில் உள்ள ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் அவரது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சிவகங்கை பேருந்து நிலையம் அருகே வரும்பொழுது எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
headmaster death in accident