தமிழகம் முழுவதும்... 3 மாதத்தில் அதிரடியாக உயரும்! மரண பீதியை கிளப்பும் பரவல் நோய்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதத்திற்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையை இயக்குனர் எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மதுரவாயிலை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அபிநிதி என்ற சிறுமியும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சல் தமிழக முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது.

எனினும் தமிழக அரசால் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஊரக உள்ளாட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கொசுவின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அபாயகரமான நிலையில் இல்லை எனவும், டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கொசு உற்பத்தி அதிகரித்தால் டெங்கு பாதிப்பும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்திற்குள் வழங்கும் படி அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகத்திற்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. டெங்கு பாதிப்பை கண்டறிவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொது சுகாதார துறை இயக்குனரின் இந்த எச்சரிக்கையால் பொதுமக்கள் மரண பீதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Healthdept director warns dengue fever will rise in TN within next 3months


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->