#BREAKING | பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சேலத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கோடை வெயிலின் உரிய வழிமுறைகளை பின்பற்றி, மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றும், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுரை வழங்கியுள்ளார்.
 

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பு :  

இன்று மற்றும் நாளை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 20/04/2023, 21/04/2023 மற்றும் 22/04/2023 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heat Wave Issue Salem info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->