கனமழை எதிரொலி : அருவி, ஆறுகளில் குளிக்க தடை!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே கனமழை முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. கனமாக கன்னியாகுமரியில் உள்ள அருவி, ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை விதிய விடிய பெய்தது. இதனால், திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதித்தது மாவட்ட நிர்வாகம்.

பேச்சிப்பாறை அணையில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் திறக்க விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றங்கரை வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப் பாறையின் முழு கொள்ளளவு 48 அடி. தற்போது நீர் இருப்பு 45.41 அடியாக உள்ளது. ஆனைக்கு நீர் வரத்து 486 கனஅடியாக உள்ள நிலையில், 1070 கனஅடி உபரிநீர் திறக்க விடபட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்வதால் பலத்த காற்று வீசுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் 300-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லாமல் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று விகித கனமழையால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கப்பட்டது. 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை லேசான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நாகை, நெல்லை போன்ற மாவட்டங்களில் கனமழையாக பெய்து வருகிறது. வரும் 28ஆம் தேதி வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain no Bathing in waterfalls and rivers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->