கனமழை எதிரொலி: நள்ளிரவு மதில் சுவர் மீது விழுந்த இடி - வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களின் கதி? - Seithipunal
Seithipunal


மதுரை, சோழவந்தான் பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்பகுதியில் தனியாக வசித்து வந்த யோசனை (வயது 60) மற்றும் அவரது மனைவி சித்ரா (வயது 55) ஆகியோரது வீட்டின் மதில் சுவரின் மீது நள்ளிரவு இடியும் சத்தம் கேட்டது. 

இதனால் இருவரும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது வீட்டின் கீழ் பகுதியில் இருந்த மதில் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்து கிடந்தது. 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அருகில் இருந்தவர்களை அழைத்து மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டிக்க செய்தனர். 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். மேலும் இடி விழுந்த வீட்டின் சுவர் பழமையானது. இதனால் தாமதிக்காமல் மீதமுள்ள பகுதியையும் இடித்து அகற்ற வேண்டும் என்றும் அரசு ஒதுக்கீட்டில் வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

இது குறித்து அறிந்த வார்டு கவுன்சிலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தம்பதியினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணம் கிடக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain Thunder falls wall house collapse


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->