கனமழை எச்சரிக்கை : நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சிவகங்கை" பயணிகள் கப்பல் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடக்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்து வருகிறது. இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்,நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் இயங்கும் "சிவகங்கை" பயணிகள் கப்பல் சேவை, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பருவநிலை மாற்றம் மற்றும் கடல் சீற்றத்தால் இருநாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நாகை மற்றும் திருவாரூர் போன்ற பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' விடுத்து, கடும் மழையும் சூறைக்காற்றும் எதிர்பார்க்கப்படும் என எச்சரித்துள்ளது.

இதனை முன்னிட்டு, நாகப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, இன்றும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையை நிறுத்தியிருப்பதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain warning Nagai Sri Lanka passenger shipping canceled for 2 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->