இன்று முதல் அமல்.. சென்னை மக்களே உஷார்... காவல்துறை அதிரடி.!!
Helmet compulsory in Chennai
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 15ஆம் வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் மற்றும் 18 பேர் பின்னிருக்கை இருந்தவர்கள் உயிரிழந்தனர்.
ஆகையால், விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், இன்று முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
English Summary
Helmet compulsory in Chennai