ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மேல்முறையீட்டு வழக்கு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை கடந்த அக்டோபர் 2ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 6 இடங்களில் பொதுவெளியில் அனுமதி வழங்கியும் 44 இடங்களில் உள்ளரங்கில் கூட்டமாக நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர் வரும் 29ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்க கோரி காவல்துறையிடம் கடந்த 29ஆம் தேதி விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அப்பொழுது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குகள் நிலவையில் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த முறை நீதிபதிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறையிடம் மனு கொடுத்து இருப்பதாகவும், மாவட்ட வாரியாக மனு கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும் என்றும் கோவை போன்ற பகுதிகளில் அனுமதி வழங்க முடியாது என்றும் காவல்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள் "இதே மாதிரியான நடைமுறைகள் தான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பின்பற்றப்பட்டதா..?? அப்படி பின்பற்றினால் அதை நீதிமன்றத்தில் பதிவு செய்து கொள்ளலாமா..?" என காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இது தொடர்பான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டதை அடுத்து வரும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் தரப்பினர் தாக்கல் செய்த 40க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் தொடர்பான பதில் மனுவை ஜனவரி 19ஆம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இறுதி விசாரணை ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High court orders TNgovt response to questions related in RSS rally


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->