என்கவுண்டரை பாராட்டாதிங்க! குற்றவாளிகளின் கால் உடைவது வழக்கமாகி உள்ளது - உயர்நீதிமன்ற கிளை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தப்ப நினைக்கும் குற்றவாளிகளின் கால் உடைவது வழக்கமாகி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தனது மகன் முருகனை, வெள்ளத்துரை உள்ளிட்ட போலீசார் சுட்டு கொலை செய்ததாக தாயார் குருவம்மாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, "கொடூரமான குற்றவாளிகள் போலீசாரை தாக்க முயலும் போது பதிலுக்கு அவர்கள் துப்பாக்கியால் சுடுகின்றனர். 

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொடூர குற்றவாளிகள் மரணம் அடைகின்றனர் அல்லது காயம் அடைகின்றனர். அடிப்படைத் தவறு, பிற்போக்கு சிந்தனை என்பதை உணராமல் என்கவுண்டரை உடனே பாராட்டி விடுகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சி, அரசமைப்பு உரிமைகள், நீதி பரிபாலனம் மீது நம்பிக்கை குறையும். வழக்கின் தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும். 

குற்றவாளிக்கு உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை உண்மையானது இல்லை, அது ஒரு மாயத் தோற்றம் என்று தெரிவித்த நீதிபதி, சிபிசிஏடி அலுவலகரை நியமித்து ஆறு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க ஆணை பிறப்பித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Highcourt say about Police Encounter


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->