பலமொழி என்றால் ஒரு நிலப்பரப்பு.! ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறப்பு - சீமான் பேச்சு.!
hindi language againt strike seeman speach
தமிழகத்தில் மத்திய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்தும், நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என்பதற்காகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெ.மணியரசன், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் சென்னை ராஜரத்தினம் கலையரங்கத்திலிருந்து இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டு பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணி நிறைவடைந்த பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
“தமிழ்நாடு அரசு வட இந்திய மக்களுக்கு வாக்குரிமையை கொடுக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய அடுத்த போராட்டம். கட்டாய இந்தியை இந்திய ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டும். ஏனென்றால் அது மிகப்பெரிய மொழிப்போரை நாங்கள் முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும்.
அதன் பின்பு சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு மிகக் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்துவதற்கெல்லாம் நான் கட்டுப்பட மாட்டேன். நான் சாதாரணமாக கட்டாய இந்தி திணிப்பிற்கு போராடவில்லை. உண்மையாக போராடுகிறேன். எங்களுக்கு ‘இந்தி தெரியாது போடா’ இல்லை எங்களுக்கு ‘இந்தி வேணாம் போடா.’
மேலும், ஆட்சியாளர்களின் கவனத்திற்கு நான் ஒன்று சொல்லுகிறேன். பல மொழி என்றால் நிலப்பரப்பு ஒன்றாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இது உறுதியாக நடக்கும். இந்திய நாட்டின் அலுவல் மொழியாக ஆங்கில மொழி இருக்கிறது. எங்களுக்கு அதுவே இருக்கட்டும்.
உங்களுக்கு வேணுமென்றால் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை நீங்கள் அலுவல் மொழியாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எங்கள் நிலத்தில் தமிழ் தான் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
hindi language againt strike seeman speach