சிதம்பரம் நடராஜர் கோயிலில் அத்துமீறி நுழைவதா? தமிழக அரசுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோயிலில் அத்துமீறி நுழைவதும், தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தி அந்த கோயிலை கையகப்படுத்த நிலைக்கும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அனைத்து கோயில்களிலும் திருவிழாக் காலங்களில் தரிசன நேரங்களில் மாற்றம் செய்வதும், பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு தரிசன நிகழ்ச்சிகளை மாற்றியமைப்பதும் வழக்கம். 

இந்நிலையில் ஆனி திருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையில் ஏறி தரிசனம் செய்வதில் மாற்றம் செய்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்தது.

இதை அரசுநிர்வாகம் தவறாக சித்தரித்ததையும், கோயிலில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திய செயலையும் கண்டிக்கிறோம். கோயிலில் பிரச்சினைகள் ஏற்படும்போது, தீட்சிதர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கோயிலுக்குள் பலத்தை காட்டியதையும், பக்தர்களை தள்ளிவிட்டதையும் கண்டிப்பதாக இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இது போன்ற செயல்களால் கோயிலை புனித மாகக் கருதி காப்பாற்றி வந்த தீட்சிதர் பரம்பரையின் நன்மதிப்பானது கேள்விக் குறியாகியுள்ளதாகவும் இந்து முன்னணி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார்கள். எனவே இக்கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட, இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்துவதையும், பக்தர்களுக்கு இடையூறு செய்து வருவதையும், தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

பக்தர்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் இந்து முன்னணி போராட்டம் நடத்த உள்ளதாகவும் இந்து முன்னணி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu Munnani Condemn to CDM Temple issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->