ஒகேனக்கல் காவிரி ஆறு: 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 5வது நாளாக நீடித்து வருகிறது.

இதற்கிடையில்,கர்நாடக மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தில்காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. இந்த கனமழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நீர் நிரம்பி உள்ளது. இதன் காரணமாக  தமிழகத்திற்கு 20 ஆயிரத்து 319 கன அடி உபரி நீர் இரு அணைகளிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக வந்ததுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. ஆற்றில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி உள்ளது.இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் வேகமாக சீறி பாய்ந்து சென்று கொண்டுள்ளது.

இந்த நீர்வரத்து அதிகரித்ததால், இதனை தொடர்ந்து  கர்நாடகா மாநிலம் தமிழக எல்லையான பிலிகுண்டுலு -வில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hogenakkal Cauvery River 20 thousand cubic feet increase in flow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->