புயல் எதிரொலி - தமிழகத்தில் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
hoisting warning cage in nine ports at tamilnadu
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி சில தினங்களுக்கு முன்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இந்த நிலையில், தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த பன்னிரண்டு மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 3-ம் தேதி வங்கக்கடலிலேயே புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4 -ம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
English Summary
hoisting warning cage in nine ports at tamilnadu