புரட்டி எடுத்த புயல் - 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.!
holiday to four district for mikjam strom
வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை புரட்டி போட்டு விட்டது. இந்தப் புயலால், புறநகர் ரெயில் போக்குவரத்து 99 சதவீதம் நிறுத்தப்பட்டுவிட்டது. மாநகர பேருந்து போக்குவரத்து சேவையும் அதிக அளவில் காணப்படவில்லை.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது.
புயலின் தாக்கம் மேலும் தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் செவ்வாய்க்கிழமையான இன்றைக்கும் பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், ''சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை 5-ந் தேதி மூடப்பட்டு இருக்கும்.
என்றாலும், அத்தியாவசிய சேவைகளான போலீஸ், தீயணைப்புத் துறை, உள்ளாட்சி அலுவலகங்கள், பால் வினியோகம், ஆஸ்பத்திரிகள், மருந்துக் கடைகள், மின்சார வினியோகம், போக்குவரத்து, பெட்ரோல் - டீசல் போன்ற எரிபொருள் விற்பனை நிலையங்கள், ஓட்டல்கள், பேரிடர் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணியில் உள்ள அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
holiday to four district for mikjam strom