உளுந்தூர்பேட்டை அருகே கோர விபத்து!... 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பயணிகள், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுற்றுலா வேனில் சென்ற நிலையில், தொடர்ந்து அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுலா வேனில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையோர மரத்தில் அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில்,  2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident near Ulundurpet 6 people including 2 women died on the spot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->