14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்.! ஹோட்டல் ஊழியர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆரோவில் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஹோட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் முத்தழகன் (23) ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவரது உறவினர்கள் அப்பகுதியில் சாலையோரத்தில் தங்கி தங்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு இருந்த 14 வயதில் சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அச்சிறுமியை பெற்றோர் சிகிச்சைக்காக புதுவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து புதுவை குழந்தைகள் நல ஆணையம் மூலம் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை கர்ப்பமாக்கியது ஹோட்டல் ஊழியர் முத்தழகன் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் முத்தழகனை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hotel worker arrested for 14 year old girl pregnant 4 month


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->