ஆந்திர பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் - கடலூரில் பரபரப்பு.!
hundrad liquor bottles seized to touristers in cuddalore
ஆந்திர பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் - கடலூரில் பரபரப்பு.!
சமீபத்தில், மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் பிற மாநில மது பாட்டில்கள் நடமாட்டத்தை கண்காணித்து தடை செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கும் மதுவிலக்கு போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை தடுக்க புதுச்சேரி தமிழக பகுதியான மொரட்டாண்டி, கிளியனூர், கோட்டக்குப்பம், கீழ்புத்துப்பட்டு, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து ஆந்திர மாநிலம் பதிவு எண் கொண்ட தனியார் பேருந்தில் ஒரே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். இதைப்பார்த்த போலீசார் அந்தப் பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர்.
அதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பேருந்தின் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
hundrad liquor bottles seized to touristers in cuddalore