பதற்றத்தை ஏற்படுத்திய கணவன்-மனைவி: அதிர்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி, அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 58) இவரது மனைவி மகேஸ்வரி. இருவரும் விவசாயிகள். நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து இருவரும் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். 

இதனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்த உடனடியாக அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்கள், சொந்தமான நிலத்தை உறவினர் ஒருவர் அபகரிக்க முயற்சி செய்கிறார் என்றும் இது தொடர்பாக போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கணவன்-மனைவி இருவரிடமும் உறுதி அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் ராஜா தனது சொத்தை அபகரிக்க முயற்சி செய்யும் உறவினர் மீது புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன்-மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife collector office front tried set fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->