கணவன் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி.! இறப்பிலும் பிரியாத தம்பதிகள்.! - Seithipunal
Seithipunal


கணவர் இறந்தவுடன் உயிரை விட்ட மனைவியால் சோகம் ஏற்ப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கூத்தியார் கூண்டு என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவில் ஆண்டிச்சி- மருதன் தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில், இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருதன் உயிரிழந்தார். இந்த செய்தி ஆண்டிச்சி அவர்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், அழுதப்படியே கணவரின் உடல் அருகில் நின்றிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அப்போது அவரை பரிசோதித்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இருவரது உடலையும் ஒரே ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband and wife death at same Time in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->