காவல்துறையில் புகார் அளித்த மனைவியை தாக்கிய கணவன் கைது.! - Seithipunal
Seithipunal


திட்டக்குடி அருகே காவல்துறையில் புகார் அளித்த மனைவியை தாக்கிய கனவன் கைது செய்யப்பட்டார்.

திட்டக்குடி கண்டமத்தான் பகுதியில் வசித்து வரும் பொன்னுசாமி, பவித்ரா தம்பதியினர். திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில் 2 மகள்களுடன் வசித்து வருகின்றனர். துபாயில் வேலை செய்து வந்த பொன்னுசாமி இரண்டு வருடங்களுக்கு முன் நாடு திரும்பிய பின் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக குடும்ப செலவுக்கு பணம் எதுவும் தருவதில்லை என்றும், இதனால் தனக்கும், குழந்தைகளுக்கும் போதிய உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும், இதுபற்றி கேட்டால் தன்னை திட்டிவதாகவும், தன்னை தாக்குவதாகவும் கனவன் மீது பவித்ரா ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் காவல் நிலையத்தில் கணவன் மனைவியிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தனர்.

பின்னர் வீட்டுக்கு சென்றவுடன் மறுபடியும் கோபமடைந்த பொன்னுசாமி தன்மீது புகார் அளித்ததற்காக மனைவி பவித்ராவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பவித்ரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து மறு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொன்னுசாமியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband arrested for attacking wife


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->