பிரிந்து சென்ற மனைவி... செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை கணவர்.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி, மது போதையில் கணவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு பூந்தண்டல் பகுதியை சேர்ந்தவர் செல்வா(38). இவருடைய மனைவி வாணி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் செல்வா குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் வாணி, செல்வாவை பிரிந்து புதுப்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த செல்வா, நேற்று மது போதையில் புதுப்பட்டினம்-விட்டிலாபுரம் சாலையில் உள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறிக்கொண்டு மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும், இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கல்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் செல்வா கீழே இறங்க மறுத்துள்ளார். இந்நிலையில் செல்வாவின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, மனைவியை சேர்த்து வைப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து செல்வா கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband climbs a cell phone tower and threatens suicide in chengalpattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->