மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொன்ற கணவர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொன்ற கணவர் - நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் தாலுகா சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் - செல்வராணி இவர்களுக்கு தமிழரசி என்ற மகளும், ஓம்பிரசாத், பிரசன்னா என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான ஸ்ரீதர் கல் உடைக்கும் கூலி வேலை செய்து வருகிறார். 

இது தொடர்பாக தம்பதியினருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. இதனால், கோபத்துடன் இருந்த ஸ்ரீதர் நேற்று அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி செல்வராணியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து ஸ்ரீதரை கைது செய்து சாலவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே போலீசார் செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடு ராத்திரியில் மனைவி மீது கல்லைத் தூக்கிபோட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband kill wife in kanchipuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->