திருப்பத்தூர் || இறந்த மனைவிக்கு நிர்வாணமாக பூஜை செய்த கணவரால் சிதறி ஓடிய உறவினர்கள்! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த சின்னபசிலிகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா தேசிங்கு. இவருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு பூர்ணிமா என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் பூர்ணிமா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். நேற்று பூர்ணிமா மாட்டு கொட்டகைகளை வழக்கம் சுத்தம் செய்யும் பணி செய்து கொண்டிருந்தார்.

 

வாட்டர் சர்வீஸ் செய்யும் மோட்டாரை கொண்டு மாட்டு கொட்டகைகளை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பூர்ணிமா மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பூர்ணிமாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்பொழுது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோதனை செய்தபோது பூர்ணிமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பூர்ணிமாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் பூர்ணிமாவின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்பொழுது திடீரென அவருடைய கணவர் ராஜா தேசிங்கு அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியில் நிர்வாணமாக இறங்கி அகோரி போல பூஜை செய்ய தொடங்கியுள்ளார். 

இதனைக் கண்ட ஊர் மக்களும் உறவினர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். சிறிது நேர பூஜைக்கு பிறகு அவரே மேலே எழுந்து வந்து தனக்கு ஒன்றும் ஆகவில்லை என விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராஜா தேசிங்கு கடந்த ஒரு வருடமாக சிவன் பக்தராக மாறி பல கோயில்களுக்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தனது மனைவி இருந்த துக்கத்தில் இதுபோன்று சவக்குழியில் இறங்கி செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband performed a naked ritual for his dead wife in Tirupattur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->