அதிமுகவில் சேர யாரிடமும் சிபாரிசு கேட்கவில்லை..சொல்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!
I have not asked anyone to join AIADMK. says O. Panneerselvam!
அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால்தான், திமுகவை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விசுவாசத்தை பொறுத்தவரை ஜெயலலிதா எனக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார் என்றும் அதிமுகவில் பிரச்சினையை யார் உருவாக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால்தான், திமுகவை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும் என கூறினார்.
மேலும் 6 மாதம் அமைதியாக இருந்தால் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதாக ராஜன்செல்லப்பா கூறியிருந்தார் என்றும் ராஜன் செல்லப்பாவின் சிபாரிசு தேவையில்லை என்றும் அவர் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை என கூறிய ஓ.பன்னீர்செல்வம் எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை என தெரிவித்தார். மேலும் என்னை அதிமுகவில் சேர்க்கும்படி யாரிடமும் நான் கேட்கவில்லை என்றும் இதற்காக யார் வீட்டு வாசலிலும் நான் நிற்கவில்லை என்றும் என் மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கச் சொன்னதே ஜெயலலிதாதான் என அப்போது பேசினார்.
![](https://img.seithipunal.com/media/OPS-wzhz9.jpg)
மேலும் ஆர்.பி உதயகுமார் அதிமுகவில் என்ன நிலையில் இருந்தார் என்று நான் கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததற்கு முழு காரணகர்த்தா அவர்தான் என்றும் என்னை பற்றியோ, என் குடும்பத்தை பற்றியோ பேசுவதை உதயகுமார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பேசிய ஓ.பன்னீர்செல்வம் , இருமொழிக் கொள்கையையே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றி வந்தனர் என்றும் இருமொழிக் கொள்கையையே தமிழக மக்கள் உயிர்மூச்சாக கொண்டுள்ளனர் என ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
I have not asked anyone to join AIADMK. says O. Panneerselvam!