சுனிதா வில்லியம்ஸ் விவகாரத்தில் அரசியல்..கடுப்பான எலான் மஸ்க்!
Politics over Sunita Williams Elon Musk!
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விரைவாக அழைத்து வர பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அவர்கள் அங்கேயா உள்ளனர்.இதையடுத்து அவர்களை மீட்க வரும் மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் (க்ரூ-10) பூமியில் இருந்து புறப்படுகிறது.
இந்தநிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விரைவாக அழைத்து வர பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.அமெரிக்காவில் நடந்த தனியார் ஊடக நிறுவன நேர்காணலில் அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் எலான் மஸ்க் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:-அரசியல் காரணங்களால் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ளனர் என்றும் முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டது என கூறினார்.
மேலும் அது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது என்றும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விரைவாக அழைத்து வர பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம் என்றும் இருவரையும் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக அழைத்து வருவோம் என கூறினார்.மேலும் இதற்கு முன்பு எங்களது நிறுவனம் விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வந்துள்ளது என்றார் எலான் மஸ்க்.
English Summary
Politics over Sunita Williams Elon Musk!