டூர் போகணும் கொஞ்சம் பணம் கொடுங்க ப்ளீஸ்! பதாகைகளுடன் நின்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


உலகில் நாள்தோறும் ஏதோ ஒரு விந்தையான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யாசகம் பெறுவதிலும் சிலர் வித்தியாசமான முற்சிகளை கையாள்கின்றனர். 

அந்த வகையில் , நாங்கள் பணமே இல்லாமல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம்..தயவு செய்து எங்கள் பயணித்திற்கு ஆதரவளியுங்கள்" என்ற பதாகைகளுடன்  சென்னை வாலாஜா சாலை சிக்னலில் வெளிநாட்டினர் நின்றிருந்தனர். 

இத பார்த்ததும் வந்தாரை வாழவைத்தே பழக்கப்பட்ட நம்மவர்கள் விடுவார்களா,   அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை ஆர்வமுடன் செய்தனர். பொதுவாக வெளிநாட்டினர் நம்மை போல் பந்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. வேலை செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்தவுடன் ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பிவிடுவது வழக்கம். அதில் ஒரு சிலர் சரியாக திட்டமிடாமல், வந்த இடத்தில் பணமின்றி யாசகம் பெரும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். 

இந்நிலையில் சென்னைக்கு சுற்றுலா வந்த ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் நாங்கள் பணமே இல்லாமல் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம்..தயவு செய்து எங்கள் பயணித்திற்கு ஆதரவளிக்குமாறு பாதகையை சுமந்தபடி சென்னை அண்ணா சாலை, வாலாஜா சிக்கனலில் வெளிநாட்டினர் நின்றனர். அவர்களுக்கு பண உதவி செய்ததோடு நிற்காமல், சாப்பிட்டீங்களா.. என்ன சாப்டீங்க.. உங்களுக்கு என்ன உதவி வேண்டும்.. இந்த பணம் போதுமா என்று கனிவோடு விசாரித்தனர். உங்களுக்கு இந்தியர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்று உறுதிமொழியும் கொடுத்தனர். 

இதுதொடர்பாக அவர்கள் அளித்த பேட்டியில், தாங்கள் சென்னை, புதுச்சேரி, திருச்சியை சுற்றி பார்த்துவிட்டு வந்துவிட்டதாவும் அடுத்து பெங்களூர் செல்ல இருப்பதாகவும் கூறினார்கள்.. இதனிடையே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், உடனடியாக அங்கு வந்தனர். உதவி கேட்ட வெளிநாட்டவர்களை, உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதேநேரம் சென்னைவாசிகள் பலர் உதவியதால் உதவியை பெற்றுக்கொண்ட வெளிநாட்டினர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I want to go on tour, please give me some money! A pleasant surprise for those standing with banners!!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->