ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


பாக்மதி விரைவு ரெயில் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு  சென்றுகொண்டிருந்தது. தொடர்ந்து அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையியில்,  சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விபத்தில்  19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில்,  திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றவுடன், மாண்புமிகு அமைச்சர் ஆவடி நாசர்  அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.

விபத்துக்குள்ளான இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I was shocked to know about the train accident chief minister stalin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->