கோப்பையை வென்ற கொண்டாட்டம்! வலி, வேதனையில் பாகிஸ்தான்!  தோல்வியை முன்பே கணித்த பாக்., - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உள்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸதான் அணியை வீழ்த்தியதே இல்லை என்ற வரலாறை, ஆப்கானிஸ்தான் அணி மாற்றி எழுதியுள்ளது. அதுவும் இந்திய மண்ணில் அந்த வரலாறு எழுதப்பட்டிருப்பது, தங்கள் சொந்த மண்ணில் கண்டா வெற்றியை போலவே ஆப்கான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் அவர் உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது வெற்றி. இரண்டுமே வரலாற்று வெற்றி. 

அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது வலி கொடுப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். 

பாபர் அசாம் அளித்துள்ள அந்த பேட்டியில், “நாங்கள் சிறப்பாக பேட் செய்து, நல்ல ஒரு இலக்கை அமைத்தோம். ஆனால், எங்களது பந்து வீச்சு சரியாக அமையவில்லை. குறிப்பாக மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட் வீழ்த்த தவறிவிட்டோம். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் சரியான லெந்தில் பந்து வீசவில்லை.

மேலும், நிறைய பவுண்டரிகளை தடுக்க தவறி, நிறைய ரன்களை வாரி கொடுத்தோம். ஆனால், ஆப்கானித்தான் அணியினர் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதனால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். எங்களது பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் சரியில்லை. நாங்கள் தோல்வியை தழுவினோம். இந்த தோல்வி வலியை ஏற்படுத்துகிறது. அடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்” என்று பாபர் அசாம் நம்பிக்கை இழந்து பேட்டியளித்திருந்தார்.

முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கும் முன்பே, பெங்களூரில் ஆஸ்திரேலியாவுடனும், சென்னையில் ஆப்கானிஸ்தானுடம் நாங்கள் விளையாட மாட்டோம். அப்படி விளையாடினாள் தோற்று விடுவோம் என்று பாகிஸ்தான்  அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அந்த ஆட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்ததது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WC 2023 PAk vs AFG and AUS match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->