மத்திய அரசு சொல்வதை மாநில அரசு கேட்கவில்லை என்றால் டிஸ்மிஸ் தான்! எச்சரிக்கும் பாஜகவின் மூத்த தலைவர்! - Seithipunal
Seithipunal


இந்துக் கோயில்களை விடுதலை செய்யப் போகிறேன்! அடுத்த சட்டசபையில் மாற்று கட்சியாக பாஜக இருக்கும்!

மதுரையில் பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய குழு தலைவருமான சுப்பிரமணியசாமிக்கு 83 வது பிறந்தநாள் விழா பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.

அந்நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி இடம் செய்தியாளர் ஒருவர் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது அதை பற்றி உங்கள் கருத்து என கேள்வி கேட்டார். 

அதற்கு பதில் அளித்த சுப்பிரமணிய சுவாமி " மத்தியில் இருக்கும் மோடி அரசாங்கம் மாநில அரசை எச்சரிக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 256 பிரிவின் படி, மாநில அரசுக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதலாம்.

அதற்கு மாநில அரசாங்கங்கள் தகுந்த பதிலோ விளக்கமோ அளிக்காவிட்டால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 356வது பிரிவின் கீழ் மாநில அரசை கலைக்கலாம். அதற்கான அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்கு உண்டு. 

மேலும் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய சுப்பிரமணியசாமி, தினமும் இந்து மதத்தைப் பற்றி கேவலமாக பொய்களை திராவிட கட்சிகள் சொல்லி வருகிறது. திராவிட இயக்கத்தை எதிர்க்க அடுத்த சட்டசபையில் மாற்று கட்சியாக பாஜக வரும். எந்த அரசாங்கமும் இந்து கோயில்களை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. கோயில்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க மட்டுமே அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு.

அதற்காக நான்கு அல்லது ஐந்து வருடங்கள் எடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 32 ஆயிரம் கோயில்களை விடுதலை பண்ணுவேன்" என பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If the state government does not listen to what the central government says it is dismissed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->