மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி பின் தங்கியே இருக்கும்.. முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!
If we dont get statehood, Puducherry will remain behind Chief Minister Rangasamy speaks
மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி மாநிலம் பின் தங்கிய நிலையிலேயே இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி அரசு 15 ஆவது சட்டப்பேரவை 6 ஆவது கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி மானியக் கோரிக்கையின் போது இன்று பேசியதாவது.மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில்
வறுமைகோட்டிற்கு மேல் உள்ள பயன்பெற முடியாததால்,புதுச்சேரி அரசு சார்பில் புதியசுகாதார திட்டம் விரைவில் அமுல்படுத்த படும்.
இத்திட்டத்தில் வறுமைகோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.இதேபோல மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி மாநிலம் பின் தங்கிய நிலையிலேயே இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
முன்னதாக கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பிறந்த நாளையொட்டி பேரவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கூட்டத்தொடரில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அங்காளன்,குற்றவாளிகள் அனைவரும் ஆட்சியாளர்களுடன் தொடர்பில் உள்ளனர் - முன்னாள் முதலமைச்சர் சண்முகம் அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை வைக்க வேண்டும், காரைக்காலில் உள்ள சாலைக்கு பெயர் சூட்ட வேண்டும் அங்காளன் பேரவையில் கோரிக்கை வைத்தார்.
இதேபோல பேசிய சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா,புதுச்சேரி மாநிலத்தில் பெண்கள் காவல் நிலையம் அதிகரிக்க வேண்டும்.புதுச்சேரியில் 17 லட்சம் மக்கள் தொகை உள்ளது இதில் 9-லட்சம் பெண்கள் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் 2 பெண்கள் காவல்நிலையமும், காரைக்காலில் 1 காவல் நிலையம் மட்டுமே உள்ளது.அதிகரித்து வரும் பெண்கள் குற்றங்களை தடுக்கும் வகையில் பெண்களுக்கான காவல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கோரிக்கை வைத்தார்.
English Summary
If we dont get statehood, Puducherry will remain behind Chief Minister Rangasamy speaks