சென்னை மாணவிகள் 4 பேர் மாயமான வழக்கில், வெளியான பகீர் தகவல்.. அதிர்ந்துபோன பெற்றோர்கள்.!!
in chennai aavadi girl missing case investigation
சென்னையில் ஒரே நாளில் 4 மாணவிகள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. சென்னை ஆவடி காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் நான்கு மாணவிகள் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
ஆனால் மாலையில் வெகுநேரமாகியும் 4 மாணவிகளும் வீடு திரும்பவில்லை என கூறப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மாணவிகளை தேடியும் காணவில்லை என்பதால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பின்னர் இவர்கள் நால்வரும் சேர்த்து மாயமாகியுள்ளது தெரியவந்ததை அடுத்து, அங்குள்ள ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி வைத்திருந்தனர்.
இதையடுத்து காணாமல் போன மாணவிகளை சென்னையில் உள்ள இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்..
இந்த நிலையில், மாயமான மாணவிகள் அனைவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் மாணவிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, தனிப்படை காவல் துறையினர் பெங்களூருக்கு சென்றனர்.
மேலும், பெங்களூர் இரயில் நிலையத்தில் மாணவிகள் சுற்றி திரிவதை காவல் துறையினர் கண்டு அதிர்ச்சியடைந்து மேற்கொண்ட விசாரணையில், சென்னையில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, பெங்களூர் இரயில்வே காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் மாணவிகள் இருந்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து பெங்களூர் சென்ற தனிப்படை காவல் துறையினர் மாணவிகளை சென்னைக்கு அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில், மாணவிகள் அனைவரும் அதிக நேரம் அலைபேசி உபயோகம் செய்ததை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாது பெங்களூர் சென்றதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai aavadi girl missing case investigation