தினமும் சாப்பாட்டில் போதைப்பொருள்.. மயக்க நிலையிலேயே ஆறு மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. சென்னையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சார்ந்தவர் சங்கர்ராவ். இவர் சென்னையில் இரயில்வே ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தின் போது உறவினர்களை பார்ப்பதற்காக விசாகப்பட்டினம் சென்றுள்ளார். 

பின்னர் விசாகப்பட்டினத்தில் இருந்து ஊருக்கு திரும்பி வரும் சமயத்தில், பேருந்து நிறுத்தத்தில் சிறுமி தனியாக நிற்பதை கண்டுள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து மிட்டாய் வாங்கி கொடுப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். 

chennai, chennai central railway station, chennai MGR railway station,

சென்னைக்கு வந்த சங்கரராவ், திருவெற்றியூரில் இருக்கும் வீட்டில் சிறுமியை அழைத்து சென்று தங்க வைத்துள்ளார். இந்த நேரத்தில், சிறுமியை வீட்டில் இருந்து வெளியே விடாமல், அக்கம் பக்கத்தினருக்கும் விஷயம் தெரியாமல் பார்த்துகொண்டுள்ளார். 

பணியை முடித்துவிக்கொண்டு செல்லும் நேரத்தில் சிறுமிக்கு சாப்பாடு வாங்கிக்கொண்டு சென்று, சாப்பாட்டில் போதை பொருளை கலந்து கொடுத்துள்ளார். சிறுமி சாப்பாட்டை சாப்பிட்டு போதை ஏறியதும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

sexual abuse, sexual torture, sexual harassment, child sexual abuse,

இந்த செயலை தொடர்ந்து கடந்த ஆறு மாதமாக செய்து வந்த நிலையில், சிறுமி எப்படியோ தப்பித்து தனது பாட்டிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார். மேலும், இவனது பிடியில் இருந்து தப்பித்தால் போதும் என்று முடிவெடுத்த சிறுமி, சென்னை எம்.ஜி.ஆர் (சென்ட்ரல்) இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.   

இவர் இரயில்களில் ஏறி செல்லாமல் பயந்த மனபக்குவத்தில் நின்றுகொண்டு இருப்பதை நோட்டமிட்ட காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்கூறிய தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சங்கர்ராவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai girl abuse 6 month using drugs police arrest culprit


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->