மூன்று மனைவிக்கு தாலி கட்டியும் அடங்காத கொட்டம்.! நான்காவதாக எடுத்த முடிவால் நேர்ந்த சோகம்.!!
in kanniyakumari a three girl married men attempt suicide
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாராவிளையை அடுத்துள்ள பகுதியை சார்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 59)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் மூன்று பெண்களை திருமணம் முடித்ததை அடுத்து., மூன்று பொண்டாட்டிக்காரர் என்று அழைப்பது வழக்கம்.
இவரது இரண்டாவது மனைவி இறந்துவிட்ட நிலையில்., முதல் மனைவிக்கு ஒரு மகன்., இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என்றும்., மூன்றாவது மனைவிக்கு ஒரு மகள் இருக்கின்றனர்.
![](https://img.seithipunal.com/media/drinks-e32rt.jpg)
மது அருந்தும் பழக்கத்தை வைத்திருந்த ராஜபாண்டியன் பணிக்கு சென்று விட்டு குடித்து விட்டு வரும் பழக்கத்தை வைத்துள்ளார். மேலும்., சில சமயங்களில் பணிக்கு செல்லாமல் குடித்து மட்டும் இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக ராஜபாண்டியனுக்கும் அவரது மூன்றாம் மனைவி சவாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடும் மன வருத்தத்தில் அவதியடைந்து வந்த ராஜபாண்டியன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/died (2)-5gxj6.jpg)
உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in kanniyakumari a three girl married men attempt suicide