வறுமையில் வாடிய குடும்பத்திற்காக குடும்ப தலைவன் எடுத்த விபரீத முடிவு.! தென்காசியில் பெரும் சோகம்.!!
in tenkasi family members attempt suicide due to loan problem
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அருகேயுள்ள கட்டளை குடியிருப்பு அம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் எல்லாரைமுத்து. இவரது மகனின் பெயர் கந்தசாமி (வயது 35). கந்தசாமின் மனைவியின் பெயர் இந்துமதி (வயது 28).
இவர்கள் இருவருக்கும் மித்ரன் (வயது 6) என்ற மகனும் மூர்த்தி (வயது 2) என்ற மகனும் உள்ளனர். கந்தசாமி ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில்., இவர்களின் குடும்பம் கடுமையான வறுமையில் வாடி வந்துள்ளது.
இதனால் எந்த நேரமும் மனதுடைந்து கந்தசாமி காணப்பட்ட நிலையில்., இன்று நீண்ட நேரம் ஆகியும் இவரது இல்லத்தில் எந்த விதமான ஆள்நடமாட்டமும் இல்லாமல் இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டிற்குள் காவல்துறையினர் சென்ற போது கந்தசாமி மற்றும் அவரது மனைவி இந்துமதி., மூத்த மகன் மித்ரன் ஆகியோர் பிணமாக கிடந்துள்ளார். மேலும்., கந்தசாமியின் இரண்டாவது மகன் மூர்த்தி உயிருக்கு போராடிய நிலையில்., சிறுவன் மித்ரனின் கழுத்தில் துண்டு இறுக்கி கட்டுப்பட்டு இருந்துள்ளது.
பின்னர் மனைவி மற்றும் மகனை கொலை செய்து கந்தசாமி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற தகவலை அறிந்த காவல் துறையினர்., மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., சிறுவனை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும்., இவர்களின் இல்லத்தின் உள்ளே உள்ள சுவரில் கடன் மற்றும் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எழுதி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in tenkasi family members attempt suicide due to loan problem