விருதுநகரில் பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து!...தீயணைப்பு வாகனம் சிக்கித் தவித்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் தீபாவளிக்கு மறுநாள் இன்றும் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்றும் சில இடங்களில் பட்டாசுகள்
வெடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகே அப்பகுதியினர் பட்டாசுகளை வெடித்தாக சொல்லப்படுகிறது.

அப்போது, பட்டாசு வெடித்து சிதறி சேமிப்பு கிடங்கின் மீது விழுந்ததில், அங்கிருந்த கழிவு அட்டைப் பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, விபத்து ஏற்பட்ட பகுதி குறுகிய சாலை என்பதால், தீயணைப்பு வாகனம் உள்ளே நுழைய முடியாமல் சிகிச் தவித்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.  இந்த தீ விபத்தின் காரணமாக அச்சம்பட்டி பகுதி முழுவதும் நேற்று புகை மண்டலமாக காட்சியளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In virudhunagar fireworks explode terrible fire accident the shock of the fire truck getting stuck


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->