#BREAKING:: அடுத்த பரபரப்பு.. திமுக எம்எல்ஏ "மோகன்" வீட்டில் வருமானவரித்துறை சோதனை.. கட்சி தொண்டர்கள் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று அவருடைய மகன் கார்த்திக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்து வருகிறார்.

இதன் காரணமாக கார்த்திக் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக திமுக தொண்டர்கள் அண்ணா நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா நகர் திமுக எம்எல்ஏ மோகன் வீட்டின் முன்பு 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் குவிந்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக எம்எல்ஏ வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income Tax raids DMK MLA Mohan and his son Karthik houses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->