ஒரு சில சமையல் குயிக் டிப்ஸ் வேண்டுமா?
Want a few cooking quick tips
சமையலில் ஒரு சில குக்கிங் டிப்ஸ்களை கடைபிடிப்பது சமையலுக்கு பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி ருசியை அதிகரிக்கவும் செய்யும்.
1.வத்தக்குழம்பு தாளிக்கும் போது ஆரஞ்சு பழ தோலையும் சேர்த்துக்கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.
2. பஜ்ஜி செய்யும்போது கடலை மாவு அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே அலாதியாக இருக்கும்.
3. தேங்காய் சாதம் எலுமிச்சை சாதம் போன்ற சாதங்கள் செய்யும்போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்துக் கொண்டால் சுவை மிகுந்ததாக இருக்கும்.

4. பல் உரைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான் தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆரியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உரையாது.
5. டால்டா நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும் இதில் ஸ்பூனை சூடாக்கி கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.
6. சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது பனைவெல்லத்தை காய்ச்சி அதில் சேர்த்து மாவு பிசைந்து சாப்பிட்டால் தனி சுவையுடன் இருக்கும்.
7. தோசை மாவுடன் வறுத்த ரவையை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
8. காய்கறிகள் வாடி போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊற விட்டு எடுத்தால் பசுமையாக மாறி இருக்கும்.
9. உலர் திராட்சை வேறுச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.
English Summary
Want a few cooking quick tips