நாங்களும் நிறைய 'சீட்' கேட்போம்ல - திமுக கூட்டணி கட்சி தலைவர் அதிரடி பேட்டி!
India alliance election DMK CPIM 2024
பாஜக கூட்டணியை எதிர்க்க நாடுமுழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I கூட்டணியை உருவாக்கின. இதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீட்டில் மற்ற கூட்டணி கட்சிகள் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில்தான் கூட்டணி என்பதால், தொகுதி பங்கீட்டை இறுதி முடிவு செய்வது திமுகவிடமே உள்ளது. மேலும், இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் தொடங்கவில்லை. அதனால் எந்த மோதலும் இதுவரை ஏற்படாமல் சுமுகமாக உள்ளது.
இந்நிலையில், திமுக. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் பேட்டியில், "தேர்தல் நெருங்க நெருங்க எல்லோரும் ஒன்றுபட்டு ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் செயல்படுவோம்.
I.N.D.I கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடும் எதிர்பார்ப்பு உள்ளது. எங்களை பொறுத்தவரை கூட்டணி-தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம்.
இந்தமுறை நாங்களும் கூடுதல் தொகுதிகளை தி.மு.க. தலைமையிடம் கண்டிப்பாக கேட்போம். தேர்தல் நிதியை பொறுத்தவரை, இதுவரை தி.மு.க. எந்த நிதியும் எங்களுக்கு கொடுத்தது இல்லை.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் செலவுக்கு தேவைப்படும் நிதியை வாங்கி, தி.மு.க.வினரிடமே கொடுத்து விட்டோம். இந்த தேர்தலிலும் அதையேதான் செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
India alliance election DMK CPIM 2024