நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு.!
Indias best Zoological park of vandalur Zoological park
நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.
இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டில் சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளை பெற்ற வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டள்ளது.
English Summary
Indias best Zoological park of vandalur Zoological park