கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விஷசாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.  இதையடுத்து, இந்த விஷசாராய சாவு தொடர்பான வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயமாக இருக்காது. 

அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். 

அதன் படி இந்த வழக்குகளை விசாரணை செய்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

அதாவது, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order action against officers in kallakurichi poisonous liquar case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->