பாஜக பெண் நிா்வாகிகளை அதிரவைத்த சம்பவம்! காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக., பெண் நிா்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில், வீடியோ பதிவிட்ட பிரபலம் இல்லாத ஒரு  யூடியூப்., சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர்  மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபுவிடம், பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில், 'இன்று' என்ற யூடியூப் சேனலில், பாஜக பெண் நிா்வாகிகளை அவதூறாக சித்தரித்து வீடியோ பதிவிட்டுள்ளனா். 

பெண்களை இழிபடுத்தும் வகையிலும், நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக்கூறியும் அதில் பேசப்பட்டுள்ளது.

பாஜக பெண் நிா்வாகிகளை தரம் தாழ்த்தி இழிவாகப் பேசியுள்ள இந்த வீடியோ சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. 

எனவே, இந்த அவதூறு வீடியோ பதிவிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த புகார் மனுவில் திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக., மகளிரணி மாவட்டத் தலைவா் க.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indru Youtube video issue Tripur BJP side complaint


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->