ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் - முத்தரசன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. 

இதற்கு சட்ட ரீதியான தடைகள் இல்லாத போதும், கவர்னர் ஆர்.என். ரவி முதலமைச்சரின் கோரிக்கையை நிராகரித்ததோடு பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்கு மறுப்பும் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனை விசாரணை செய்த நீதிபதிகள், பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றத்தில் நிறுத்தி வைத்த பிறகு, பதவி பிரமாணம் செய்ய மறுப்பதற்கு கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியதுடன், இவரை நியமிக்க வேண்டுமென்று முதலமைச்சர் கூறினால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக கவர்னர் அதை செய்யத்தான் வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்தை மதிப்பவர் என்றால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருடன் இணக்கமாக இருந்தார். ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டில் இருந்து சிறிதும் மாறவில்லை.  சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டையும் மதிப்பவராக இருந்தால் உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும். அவர் இனியும் பதவியில் நீடிப்பது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பானது. அவர் பதவி விலக முன்வரவில்லை என்றால், ஜனாதிபதி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

inidan communiest secaretary mutharasam teet about governor rn ravi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->