#கோவை | வாயில் அடிபட்ட நிலையில் சுற்றி வந்த பெண் யானை! கடைசிவரை போராடியும் சிகிச்சை பலனின்றி பலி!
Injured Elephant Death in karamadai
கோயம்புத்தூர் : கடந்த வாரம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித் திரிந்தது.
காயம் காரணமாக நீர், உணவு உண்ண முடியாமல் தவித்தவந்த யானை உடல் மெலிந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் யானையின் வாய்ப்பகுதியில் உள்ள காயம் காரணமாக நீர், உணவு உண்ண முடியாமல் பட்டினியாலும், வலியாலும் தவிப்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து, வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
யானைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அப்போதைய தகவலின்படி, நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளதால், ஒரு மாதமாக உணவு சாப்பிட முடியாமல் சோர்வடைந்துள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், வாயில் அடிபட்ட அந்த பெண் யானை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தது. டாப்சிலிப் வரகழியாறு யானைகள் முகாமில் வைத்து சிகிச்சை அளித்தும் பெண் யானை உயிரிழந்தது.
கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் யானைகள் தொடர்ந்து பலியாகும் சம்பவம் அதிகரித்து வருவது வனஉயிர் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
English Summary
Injured Elephant Death in karamadai