இயந்திரம் மூலம் அள்ள அனுமதி வழங்கியது யார்..?? கல்லணை அருகே மணல் குவாரி செயல்பட இடைக்கால தடை..!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தை அடுத்த லால்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "திருச்சி கல்லணை மற்றும் அதனை சுற்றியுள்ள பூதலூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு மணல் அள்ளப்பட்டால் கல்லணை சேதம் அடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே கல்லானையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு மணல் அல்ல இடைக்கால தடை விதிக்க வேண்டும். 

மேலும் கல்லணை பகுதியில் மணல் குவாரி செயல்பட நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமீபத்தில் கல்லணை அருகே இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவது தொடர்பான புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அப்பொழுது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் அரசு குவாரிகள் முறையாக அனுமதி பெற்று கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகின்றது என வாதிட்டார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் "அனுமதி பெற்று இயங்கினாலும் விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தி மணல் அல்ல யார் அனுமதி வழங்கியது..?? குவாரியில் முறைகேடு கண்டறியப்பட்டால் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்" என எச்சரித்தனர்.

இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வரும் 11ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கல்லணையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Interim ban on sand quarry operation near Kallanai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->