காவிரி ஆற்றில் சாக்கடை நீர் கலக்கும் விவகாரம் - கர்நாடக அரசுக்கு இறையன்பு கடிதம்.!
iraiyanbu wrote letter to karnataga govt
காவிரி ஆற்றில் சாக்கடை நீர் கலக்கும் விவகாரம் - கர்நாடக அரசுக்கு இறையன்பு கடிதம்.!
சமீப காலமாகவே காவிரி ஆற்றில் கழிவு நீர் கலந்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக தலைமைச் செயலாளர் இறையன்பு, கர்நாடக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் "கர்நாடகாவில் இருந்து முறைப்படி கிடைக்கும் நீரில் அதிகளவு கழிவு நீர் இருக்கிறது. பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. அதிகளவு சாக்கடை நீர் கலப்பதால் மக்கள் அச்சம் அடைகின்றனர்.
எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தின் மூலம் கர்நாடக அரசிடம் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
iraiyanbu wrote letter to karnataga govt